ADDED : செப் 02, 2026 12:48 AM
அ நிறம் | அளவு
மங்களூரு: ஒரு கம்பாலா போட்டியை நடத்த ஏழு லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, மாநில அரசு செய்வதாக கம்பாலா சங்க தலைவர் தேவிபிரசாத் ஷெட்டி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
ஒரு கம்பாலா போட்டியை நடத்த, 2 லட்சம் ரூபாய் வீதம், 20 போட்டிகளுக்கு, 40 லட்சம் ரூபாய் மானியமாக கடந்த ஆண்டு மாநில அரசு வழங்கியது. நடப்பு ஆண்டிலும், அதே போல 20 போட்டிகளுக்கு, 40 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.
மானியத்தை அதிகப்படுத்த மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் படி, ஒரு போட்டிக்கு, 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
