1,250 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க ரூ.777 கோடி ஒதுக்கீடு
1,250 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க ரூ.777 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 07, 2026 06:19 AM
மின்சாரத்துறை l மாநிலத்தின், 21 லட்சம் விவசாயிகளின், 36 லட்சம் பம்ப் செட்களுக்கு, இலவச மின்சாரம் வழங்க, நடப்பாண்டு 19,290 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது
l 'கிரஹஜோதி' திட்டத்துக்கு 10,578 கோடி ரூபாய் செலவிடப்படும்
l வரும் நிதியாண்டில் 2,777 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் வகுக்கப்படும்
l 'முதல்வர் சோலார் மின் உற்பத்தி திட்டம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பலகைகள் பொருத்தப்படும்
l கே.பி.டி.சி.எல்., சார்பில், மின் தொகுப்பு வசதியை மேம்படுத்த, 2026 - 27ல், புதிதாக, 100 துணை மையங்கள் அமைக்கப்படும்
l அதிக மின் அழுத்தத்தை நிர்வகிக்கும், பி.இ.எஸ்.எஸ்., திட்டம், 2026 - 27ல் ஹுலியூர், பாவகடா மற்றும் குஷ்டகி துணை மையத்தில் செயல்படுத்தப்படும். இதற்காக 3,000 கோடி ரூபாய் செலவிடப்படும்
l எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, எஸ்காம்களின் ஒருங்கிணைப்பில், பொது இடங்களில், 1,250 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க, 777 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
l மின்துறையில் புதிய தொழில் நுட்பத்தை ஊக்கப்படுத்தும் திட்டங்களுக்கு, 20 கோடி ரூபாய் செலவிடப்படும்.
