UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பயணித்த பயணியரின் உடைமைகளை சோதனை செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இருவர், தாங்கள் பிடிபடாமல் இருக்க மற்ற பயணியரின், ‘டிராலி பேகின்’ கீழ்பகுதியில் தங்க கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட இருவரை கண்டுபிடித்த டி.ஆர்.ஐ., அதிகாரிகள், 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.30 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
