UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 11:36 PM
நே ற்று மாலை மைசூரு அரண்மனை மைதானத்தில் இருந்து மரத்தினால் அம்பாரியை சுமந்தபடி சென்ற மகேந்திரா யானை, ஆயுர்வேதம் சதுக்கம் அருகில் செல்லும் போது மிகவும் சோர்வாக காணப்பட்டதால் நடக்காமல் அங்கேயே நின்றது. இதையடுத்து, பயணத்தை பாதியில் நிறுத்தி, மீண்டும் திரும்பி அரண்மனைக்கே யானைகள் ஊர்வலம் புறப்பட்டது.
டி ல்லியில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற, கர்நாடக முதல்வர் சிவகுமார், நிதித்துறையிடம் இருந்து கர்நாடகாவுக்கு வர வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பெ ங்களூரு இருந்து ஷிவமொக்காவின் சாகருக்கு தனியார் பஸ் புறப்பட்டது. ஷிவமொக்காவில் பெரும்பாலான பயணியர் இறங்கிவிட்டனர். சாகருக்கு இரு பயணியருடன் நேற்று அதிகாலை சென்ற பஸ்சில் திடீரென தீப்பற்றியது. இதை பார்த்த பஸ் ஓட்டுநர், நடத்துனர், இரு பயணியரும் பஸ்சில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.
