தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ரூ.600க்காக வாலிபர் கொலை: கட்டட தொழிலாளி கைது

ரூ.600க்காக வாலிபர் கொலை: கட்டட தொழிலாளி கைது

ரூ.600க்காக வாலிபர் கொலை: கட்டட தொழிலாளி கைது


UPDATED : அக் 12, 2026 12:31 AM

ADDED : அக் 11, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 12:31 AM ADDED : அக் 11, 2026 08:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.கே.அச்சுக்கட்டு: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், 600 ரூபாய்க்காக, வாலிபரை மரக்கட்டையால் அடித்து கொன்ற கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு வித்யாபீடம் சதுக்கம் பகுதியில் வசித்தவர் மஞ்சு என்ற கோழி மஞ்சு, 27. இவரது நண்பர் பழனி, 28. இருவரும் கட்டட தொழிலாளிகள்.

சில தினங்களுக்கு முன், பழனி, தன் மொபைல் போனை மஞ்சுவிடம் அடகு வைத்து, 600 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். திருப்பி கொடுக்க வில்லை.

நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது, அடகில் உள்ள தன் மொபைல் போனை திரும்ப தரும்படி பழனி கேட்டுள்ளார்.

'கடனாக வாங்கிய 600 ரூபாயை கொடுத்தால் தான், மொபைல் போனை தருவேன்' என மஞ்சு கூறியதால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

கோபம் அடைந்த பழனி, அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து மஞ்சு தலையில் அடித்தார். சுருண்டு விழுந்த மஞ்சு, சம்பவ இடத்திலேயே இறந்தார். பழனியை, சி.கே.அச்சுக்கட்டு போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us