தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சபாநாயகரின் இருக்கையை நிறுவ ரூ.42.93 லட்சமா?

 சபாநாயகரின் இருக்கையை நிறுவ ரூ.42.93 லட்சமா?

 சபாநாயகரின் இருக்கையை நிறுவ ரூ.42.93 லட்சமா?


ADDED : நவ 29, 2025 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: சுவர்ண விதான்சவுதாவில் கடந்த ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட, சபாநாயகர் இருக்கைக்கு, அரசு 42.93 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெலகாவி சுவர்ண விதான் சவுதா திறக்கப்பட்ட பின், அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்து சமூக ஆர்வலர் பீமப்பா கடாத், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டிருந்தார். தனக்கு கிடைத்த ஆவணங்களை, அவர் பெலகாவியில் ஊடகத்தினரிடம் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

பெங்களூரின் விதான்சவுதாவின், சட்டசபை ஹாலில் உள்ள சபாநாயகர் இருக்கையை போன்று, பெலகாவியின், சுவர்ண விதான் சவுதாவிலும் இருக்கையை தயார் செய்யும்படி, சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி மாநில வன தொழில் கார்ப்பரேஷன், 42.93 லட்சம் ரூபாய் செலவிட்டு, இருக்கை தயார் செய்துள்ளது.

கடந்த 2012ல் சுவர்ண விதான் சவுதாவை திறந்து வைக்க, வருகை தந்த ஜனாதிபதி ஓய்வெடுப்பதற்காக, 36.60 லட்சம் ரூபாய் செலவில், மர கட்டில், இருக்கைகள் தயாரிக்கப்பட்டன. இந்த செலவை, தற்போது சபாநாயகரின் இருக்கைக்காக செய்யப்பட்ட செலவு முறியடித்துள்ளது.

சுவர்ண விதான்சவுதாவில், தேசத்தலைவர்கள், 11 முக்கிய புள்ளிகளின் உருவப்படங்களை ஆயில் பெயின்டிங் செய்ய, 67.67 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளனர். இதற்கு முன் மாநிலத்தின் பிரபலமான ஓவிய கலைஞர்கள் மூலமாக, ஏழு தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைய, மாநில அரசு 2023 பிப்ரவரி 22ல், 13.34 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தது.

அதன்பின் ஓவியங்களை ஆய்வு செய்த, வல்லுநர் குழுவினர், இந்த ஓவியங்கள் தலைவர்களின் உருவத்துடன் ஒத்துப்போகவில்லை. இதற்கு பதிலாக ஆயில் பெயின்டிங் மூலமாக, ஓவியங்களை தயாரிக்கும்படி அறிக்கை அளித்திருந்தது. எனவே ஓவியங்களுக்காக மீண்டும் லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளது.

அதேபோன்று, மேல்சபை தலைவரின் இருக்கையை புதுப்பிக்க, 1.98 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.

வீண் செலவை கட்டுப்படுத்தியதாக, அரசு கூறுகிறது. மக்கள் பாடுபட்டு செலுத்தும் வரிப்பணத்தை, தேவையற்ற பணிகளுக்கு செலவிடுவது சரியல்ல. வீண் செலவுகளை நிறுத்தாவிட்டால், அரசை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவோம்.

லட்சக்கணக்கான ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட சபாநாயகரின் சிறப்பு இருக்கை, தலைவர்களின் ஓவியங்கள் உள்ளிட்டவை மக்களின் வரிப்பணத்தால் உருவானவை. இங்கு பார்வையிட மக்களுக்கு அனுமதி அளிப்பதுடன், ஓவியங்கள் வரைய சபாநாயகரின் இருக்கை தயாரிக்க செய்யப்பட்ட செலவு மற்றும் வரலாற்றின் மகத்துவம் பற்றியும், விவரிக்க வேண்டும்.

இவற்றை மக்கள் பார்வையிட வாய்ப்பு இல்லையென்றால், ஆடம்பர இருக்கை, ஓவியங்கள் தயாரித்ததில் அர்த்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us