ADDED : மார் 29, 2026 03:44 AM

தோட்டக்கலை மாநகராட்சிக்கு உட்பட்ட 496 பூங்காக்களை பராமரிக்க 47.45 கோடி ரூபாயும், மேம்படுத்த 6.30 கோடி ரூபாயும், பூங்காக்களை சுற்றி கம்பி வேலி அமைக்க 3.25 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் நகர்ப்புற பகுதிகளை பசுமை மண்டலமாக மாற்ற, பூங்காக்கள், பள்ளிகள், சாலையோரம், காலி இடங்களில் சிறிய வனப்பகுதி அமைக்கும் திட்டம் உருவாக்கப்படும்.
செல்லபிராணிகளுக்கான பூங்கா, முதியவர்களுக்கு பொது நுாலகம் அமைக்க திட்டம் வகுக்கப்படும்.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், 20 பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி நிறுவப்படும். இதற்காக, 2 கோடி ரூபாய் செலவிடப்படும்.
நாயண்டஹள்ளி ஏரியில் சைக்கிள் பாதை அமைக்க திட்டம் வகுக்கப்படும்.
மஹாலட்சுமி லே அவுட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பூங்கா, உஷா பூங்கா, குவெம்பு பூங்கா, கார்லேஸ்கர் காலனி பூங்காவின் மேம்பாட்டிற்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
