தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மருத்துவ கல்லுாரிகள், பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ.650 கோடி ரூபாய்

 மருத்துவ கல்லுாரிகள், பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ.650 கோடி ரூபாய்

 மருத்துவ கல்லுாரிகள், பல்நோக்கு மருத்துவமனைக்கு ரூ.650 கோடி ரூபாய்


ADDED : மார் 07, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவ கல்வி l உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில், 198 கோடி ரூபாயில், 450 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை; ராய்ச்சூரில், 10 கோடி ரூபாயில் அறுவை சிகிச்சை மையம்; மைசூரு மற்றும் துமகூரில், 92 கோடி ரூபாயில் புற புற்றுநோய் மையம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது

l நடப்பு நிதியாண்டில், மருத்துவ கல்லுாரிகளுக்கும், மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகளுக்கும், 650 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதில், மருத்துவ உபகரணங்களுக்கு 220 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l மைசூரில், 400 படுக்கைகள் கொண்ட ஜெயதேவா இதய மருத்துவமனையை, 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த, 180 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l விஜயபுரா, கோலார் மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லுாரி அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு

l உத்தரகன்னடாவின் கார்வார், யாத்கிரில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க, தலா 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l விஜயநகரா, கொப்பால் மாவட்டங்களில் மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை வழங்க, முனிராபாத் - டி.பி.டேமில், புற்றுநோய் மருத்துவமனை

l பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் உள்ள மாநகராட்சியின் பல்நோக்கு மருத்துவமனையில், கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துடன் இணைந்து, ஜெயதேவா இதய நோய் நிறுவனத்தின் மண்டல மையம் நிறுவப்படும்

l பெங்களூரு வாணி விலாஸ் மருத்துவமனை, கலபுரகியின் குல்பர்கா மருத்துவமனை கல்லுாரிகளில் ஐ.வி.எப்., மையம் அமைக்க தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு

l பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை, 'சாந்தவேரி கோபாலகவுடா மருத்துவமனை' என பெயர் மாற்றம் செய்யப்படும். பெங்களூரு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர்களுக்கான விடுதி கட்ட, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us