/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
/
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்
ADDED : ஏப் 25, 2025 05:42 AM
தார்வாட்: 'வீட்டின் அருகில் சிகரெட் பிடிக்க வேண்டாம்' என்று கூறிய ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் வீட்டுக்குள் நுழைந்த நான்கு இளைஞர்கள், அவரையும், அவரது குடும்பத்தையும் தாக்கி விட்டு தப்பியோடினர்.
தார்வாட் மாவட்டம், காந்தி சவுக்கில், சிரிஷ் பெல்லாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர். நேற்று முன்தினம் இரவு இவரின் வீட்டின் அருகில் நான்கு இளைஞர்கள் நின்றபடி, சிகரெட் பிடித்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்த சிரிஷ் பெல்லாரி, 'வீட்டின் அருகில் சிகரெட் பிடிக்க வேண்டாம்' என்று அறிவுரை கூறினார். இதனால் கோபம் அடைந்த நான்கு இளைஞர்களும், சிரிஷிடம் சண்டை போட்டனர்.
தடுக்க முயற்சித்த குடும்பத்தினரை வீட்டுக்குள்ளே வைத்து சரமாரியாக தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். படுகாயம் அடைந்த சிரிஷ், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த தார்வாட் நகர போலீசாரிடம், சிரிஷ் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்ட செய்தி அறிந்த பல்வேறு ஹிந்து அமைப்பினர், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தார்வாட் நகர போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.