sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆர்.எஸ்.எஸ்., ராட்சதன் பிரியங்க் கார்கே காட்டம்

 ஆர்.எஸ்.எஸ்., ராட்சதன் பிரியங்க் கார்கே காட்டம்

 ஆர்.எஸ்.எஸ்., ராட்சதன் பிரியங்க் கார்கே காட்டம்


ADDED : பிப் 16, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''ஆர்.எஸ்.எஸ்., ராட்சதன் போன்றது; அதன் நிழல் தான் பா.ஜ., நாம் நிழலுடன் சண்டையிடக் கூடாது. ராட்சதனுடன் சண்டையிட வேண்டும்,'' என பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

மதத்தை காப்பாற்றிக் கொள்ள மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கூறுகின்றனர். 'மதம், ஜாதிகள் இடையே சண்டையை துாண்டுபவர்கள் நாட்டின் துரோகிகள்' என்று அம்பேத்கர் கூறினார்.

'அம்பேத்கரின் பெயரை, அவையில் குறிப்பிடுவது தற்போது பேஷனாகிவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். பார்லிமென்டில் அமித் ஷா கூறுவது ஆணவம் இல்லையா? 57 ஆண்டுகள் ஆகியும், நம் நாட்டின் தேசிய கொடியை, ஆர்.எஸ்.எஸ்., ஏற்றியதில்லை.

அவர்களுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டால், பதில் அளிக்காமல் இருந்தனர். இறுதியாக பெங்களூரு வந்திருந்த மோகன் பாகவத், 'ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை' என்று கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், சட்ட விரோதமாக பணத்தை மாற்றுகின்றனர். அவர்கள் எந்த வரியும் செலுத்துவதில்லை. அவர்கள், நன்கொடையும் வாங்குவதில்லை. குருதட்சணையை மட்டும் எடுத்து கொள்கின்றனர். குருதட்சணை என்றால், கொடியின் பெயரில் பணம் சேகரிப்பது.

ஆர்.எஸ்.எஸ்., இல்லையென்றால், ம.ஜ.த.,வை விட மோசமான நிலைக்கு பா.ஜ., சென்றிருக்கும். ஆர்.எஸ்.எஸ்., ராட்சதன் போன்றது; அதன் நிழல் தான் பா.ஜ., நாம் நிழலுடன் சண்டையிடக் கூடாது. ராட்சதனுடன் சண்டையிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us