/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.டி.ஓ., சோதனை ரூ.6.46 லட்சம் அபராதம்
/
ஆர்.டி.ஓ., சோதனை ரூ.6.46 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 04, 2025 05:17 AM
கோலார்: தங்கவயல், கோலார் ஆர்.டி.ஓ.,வுக்கு உட்பட்ட இடங்களில் விதிமீறலாக இயக்கப்பட்ட வாகனங்கள் மீது 6.46 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தங்கவயல், கோலார் ஆர்.டி.ஓ.,வுக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகள் மீறி இயங்கும் வாகனங்கள் மீது, ஆர்.டி.ஓ., அதிகாரி எம்.வேணுகோபால் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
விதிமீறல் தொடர்பாக 680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இத்தகைய வாகனங்களுக்கு 6.46 லட்சம் ரூபாய் அபராதமும், வரி செலுத்தாமல் ஏமாற்றிய வாகனங்களுக்கு 5.38 லட்சம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி வாகனங்கள், எல்.எம்.வி., என்ற இலகு ரக மோட்டார் வாகனங்கள், ஆட்டோக்கள், வெள்ளை போர்டு வாகனங்களை பயணியர் வாகனங்களாக பயன்படுத்தியது, சரக்கு வாகனங்களில் அதிக லோடு ஏற்றிச் சென்றது, தார்பாய் மூடாமல் மணல் லாரிகள் இயக்கியது, தகுதி சான்று பெறாதது, பதிவு செய்யாத வாகனங்கள் இயக்கியது, கோலார் நகராட்சிக்கு சொந்தமான ஐந்து டிராக்டர்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது' என்றனர்.