தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு விவகாரம் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி கடும் வாக்குவாதம்

 காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு விவகாரம் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி கடும் வாக்குவாதம்

 காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு விவகாரம் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி கடும் வாக்குவாதம்


ADDED : மார் 12, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையில் மத்திய அரசை இழுத்ததால், சட்டசபையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டசபையில் பூஜ்ய நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் ரங்கநாத் பேசுகையில், ''காஸ் சிலிண்டர் விலையை 900 ரூபாயில் இருந்து, 960 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தற்போது, போர் காரணமாக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு யார் பொறுப்பு. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பலவீனமான கொள்கையே காரணம்,'' என்றார்.

பிரதமர் பெயரை பயன்படுத்தியதால் கோபம் அடைந்த பா.ஜ., உறுப்பினர்கள், ரங்கநாத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் பிரியங்க் கார்கே எழுந்து, '' மத்திய அரசின் பொருளாதார, வெளியுறவு கொள்கை என்ன. உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமரால், சிலிண்டர் பிரச்னை பற்றி ஏன் பேச முடியவில்லை,'' என்று கேள்வி எழுப்பினார்.

பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார், ''அமைச்சராக இருந்து கலபுரகி வளர்ச்சிக்காக, நீங்கள் செய்தது என்ன,'' என்று கேள்வி எழுப்பியதால், பிரியங்க் கார்கே, சுனில் குமார் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து சுனில்குமார் பேசுகையில், ''போரால் அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான பிரச்னையை எதிர்கொள்கின்றன. சிலிண்டர் தட்டுப்பாடு எங்களுக்கும் கவலை அளிக்கிறது. நமது மாநிலத்தில் நிலவும் பல பிரச்னைகளை அரசால் தீர்க்க முடியவில்லை. உங்களால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை,'' என்றார்.

அப்போது எழுந்து பேசிய முதல்வர் சித்தராமையா, சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தான் நேரடி காரணம் என்று கூறினார். இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீண்டும் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

எதி ர்க்கட்சி தலைவர் அசோக், ''போர் நடக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் செய்யாதீர்கள். பிரச்னையை தீர்க்க வழி சொல்லுங்கள். சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களை மூட, முதல்வர் ஆதரவு தந்து உள்ளார். இதுபற்றி நாளிதழ்களில் செய்திகள் வந்து உள்ளன,'' என்றார்.

இதை கேட்டு கடும் கோபம் அடைந்த சித்தராமையா, ''ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்வது நியாயமானது என்று மட்டுமே கூறினேன். ஹோட்டல்களை மூட நான் ஆதரவு என்று கூறியதை, என் அருகில் இருந்து நீங்கள் கேட்டீர்களா,'' என்று, அசோக்கை பார்த்து ஆவேசமாக பேசினார்.

''ஆமாம் நீங்கள் கூறியது உண்மை,'' என்று அசோக் கூற, ''நுாறுக்கு நுாறு சதவீதம் நான் அப்படி சொல்லவே இல்லை,'' என்று, முதல்வர் மீண்டும் ஆவேசமாக கூறி விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us