தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டசபையில் ரூபகலா - நாராயணசாமி மோதல்

 சட்டசபையில் ரூபகலா - நாராயணசாமி மோதல்

 சட்டசபையில் ரூபகலா - நாராயணசாமி மோதல்


ADDED : செப் 24, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ரூபகலா - நாராயணசாமி, சட்டசபைக்குள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். மேஜையை தட்டி, ரூபகலா ஆக்ரோஷமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் முனியப்பா. இவரது மகள் ரூபகலா, கோலார் மாவட்டத்தின் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

முனியப்பாவும், கோலாரின் பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமியும், அரசியலில் எதிரும் புதிருமாக உள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்கு முனியப்பாவும், அவரது மகள் ரூபகலாவும் தான் காரணம் என, நாராயணசாமி வெளிப்படையாக கூறினார்.

இந்நிலையில், இண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல் ராஜினாமா குறித்து, சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது. ரூபகலா அமர்ந்திருந்த இருக்கையின் முன்வரிசையில் அமர்ந்திருந்த நாராயணசாமியும், பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டியும் ஏதோ ஒரு விஷயத்தை பற்றி பேசி சத்தமாக சிரித்தனர்.

திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த ரூபகலா, திடீரென நாராயணசாமி, சுப்பாரெட்டி அமர்ந்திருந்த இருக்கையின் முன் நின்று, 'ஏன் என்னை கிண்டல் செய்து பேசுகிறீர்கள்' என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். பதிலுக்கு நாராய ணசாமியும் ஏதோ கூற இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

நாராயணசாமி அமர்ந்திருந்த மேஜையை, ரூபகலா பலமாக தனது கையால் தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கவனித்த எதிர்க்கட்சி தலைவர் அசோக், ''யாரையும் அடித்து விட வேண்டாம்,3' என்று கிண்டலாக கூறினார். பின், ரூபகலா தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us