ADDED : செப் 24, 2026 12:37 AM
தங்கவயல் : உரிகம் சிவராஜ்நகர் வேளாங்கண்ணி மாதா சிற்றாலய 29ம் ஆண்டு விழா, நாளை முதல் 27ம் தேதி வரை நடக்கிறது.
நாளை மாலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. பீட்டர், மேரி குழுவினர் ஜெப மாலை, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் வட்டார பஞ்சாயத்து தலைவர் டி.ஞானசம்பத், இணைச் செயலர் மனோகரன், மதர் தெரசா அறக்கட்டளை தலைவர் டி.அசோக்குமார் முன்னிலையில் மாதாவின் திருக்கொடியை சரளா சம்பத் ஏற்றுகிறார்.
கதிர் அஹ்மத், பெங்களூரு எச்.ஏ.எல். ஊழியர்கள் போசராஜ், தீனதயாளன், திப்பேசாமி, ராஜேஷ், சங்கர் தயாளன், ராபின்சன், முரளி, தயாளன் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் நாள் காலை 10:00 மணி முதல், சிறப்பு பிரார்த்தனைகள், ஜெபமாலை; மதியம் 1:00 மணிக்கு அன்னதானம்; மாலை 6:00 ஜெபமாலை; மூன்றாம் நாள் காலை 10:00 மணி முதல் ஜெபமாலை, பிரார்த்தனை, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், இரவு 7:00 மணிக்கு வாண வேடிக்கைகளுடன் மாதாவின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகி அன்பழகன் தலைமையில் குழுவினர் செய்துள்ளனர்.
