/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகள்களுடன் சொந்த நாடு சென்றார் ரஷ்ய பெண்
/
மகள்களுடன் சொந்த நாடு சென்றார் ரஷ்ய பெண்
ADDED : செப் 30, 2025 05:38 AM

பெங்களூரு: கோகர்ணாவின், ராமதீர்த்தா வனப்பகுதியின் குகையில் வசித்த ரஷ்ய பெண்ணும், அவரது இரண்டு மகள்களும் நேற்று சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உத்தரகன்னட மாவட்டம், கோகர்ணாவின், ராமதீர்த்தா வனப்பகுதியில் உள்ள குகையில் தன் இரு மகள்களுடன் ஒரு பெண் வசிப்பதை போலீசார், ஜூலை 12ல் கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் நினா குடினா, 40, என்பதும் ரஷ்யாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இந்திய கலாசாரம், ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டு, தன் மகள்களான ப்ரேயா, 6, அமா, 4, ஆகியோருடன் வசிப்பதாகவும், தினமும் லிங்க பூஜை செய்வதாகவும் கூறினார். மூவரையும் மீட்ட போலீசார், பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். இத்தகவல் ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் தன் மனைவி, இந்தியாவில் இருப்பதை அவரது கணவர் தெரிந்து கொண்டார். மனைவி, மகள்களை ரஷ்யாவுக்கு அனுப்பும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப போலீசாரும் அனுமதி கோரினர். நீதிமன்றமும் அனுமதி அளித்தது.
இதையடுத்து டி.என்.ஏ., பரிசோதனை செய்த போலீசார், இரு குழந்தைகளும் ரஷ்ய பெண்ணுடைய குழந்தைகள் தான் என்பதை உறுதி செய்து கொண்டனர். நேற்று பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மூலம், அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.