/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.60
/
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.60
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.60
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.60
ADDED : ஆக 11, 2025 04:51 AM
பெங்களூரு: ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையில் இன்று முதல் அதிகாரபூர்வமாக மெட்ரோ ரயில் இயங்குகிறது. இரு முனையங்களுக்கு இடையில் 60 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இன்று முதல் இப்பாதையில் அதிகாரபூர்வமாக ரயில் இயங்க உள்ளது. இரண்டு முனையங்களில் இருந்தும் காலை 6:30 மணிக்கு முதல் ரயில் புறப்படுகிறது. ஒவ்வொரு 25 நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது.
பொம்மசந்திராவில் இருந்து கடைசி ரயில் இரவு 10:42 மணிக்கும்; ஆர்.வி.ரோட்டில் இருந்து இரவு 11:55 மணிக்கும் கடைசி ரயில் புறப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 7:00 மணி முதல் ரயில் சேவை துவங்க உள்ளது. இரு முனையங்களுக்கு இடையில் 60 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டோக்கன், அட்டைகள், ஸ்மார்ட் கார்டு, கியுஆர் கோடு டிக்கெட்டுகள் வழக்கம்போல கிடைக்கும்.