/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ். எஸ்.எல்.சி., மாதிரி தேர்வு நேரம் மாற்றம்
/
எஸ். எஸ்.எல்.சி., மாதிரி தேர்வு நேரம் மாற்றம்
ADDED : ஜன 21, 2026 07:16 AM
பெங்களூரு: எஸ். எஸ்.எல்.சி., மாதிரி தேர்வு வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து, தேர்வு நேரத்தை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மாற்றியுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., முதல் மாதிரி தேர்வு வரும் 27 முதல் பிப்ரவரி 2 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வு காலை 10:00 மணிக்கு பதிலாக காலை 11:00 மணிக்கு தொடங்கும். இருப்பினும், அனைத்து மாணவர்களும் காலை 9:00 மணிக்குள் தங்கள் வகுப்பறைகளில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கான வினாத்தாள்களையும் பள்ளி தலைமை ஆசிரியர், அந்தந்த நாளில் காலை 9:30 மணிக்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும். காலை 10:00 மணிக்குள் பிரின்ட் எடுத்து, காலை 10:30 மணிக்குள் வினாத்தாள்கள் தயாராக இருக்க வேண்டும்.
காலை 10:50 மணிக்குள் தேர்வு கூடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஏதேனும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டால், அந்த பொறுப்பு பள்ளியின் தலைமை ஆசிரியர், நோடல் ஆசிரியர், தொகுதி கல்வி அதிகாரி, மாவட்ட துணை இயக்குநர் பொறுப்பேற்க வேண்டும்.
ஒவ்வொருவர் மீதும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்படும். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

