/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சத்குரு கேசவானந்த சுவாமிகள் 69ம் ஆண்டு மஹா குரு பூஜை
/
சத்குரு கேசவானந்த சுவாமிகள் 69ம் ஆண்டு மஹா குரு பூஜை
சத்குரு கேசவானந்த சுவாமிகள் 69ம் ஆண்டு மஹா குரு பூஜை
சத்குரு கேசவானந்த சுவாமிகள் 69ம் ஆண்டு மஹா குரு பூஜை
ADDED : மே 13, 2025 12:56 AM

தங்கவயல், : சத்குரு கேசவானந்த சுவாமி அறக்கட்டளை சார்பில் ஆண்டர்சன்பேட்டை மஸ்கம் சாம்ராஜ் நகரில் உள்ள சாந்தி ஆசிரமத்தில் 69ம் மஹா குருபூஜை நடந்தது.
தங்கவயல், பத்ராவதி, வேலுார் ஆகிய மூன்று இடங்களில் கேசவானந்த சுவாமி சாந்தி ஆசிரமம் நடத்தி வந்தார். பத்ராவதி ஆசிரமம் மூடப்பட்டது. தங்கவயல், வேலுாரில் இயங்கி வருகிறது.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில் மஹா குருபூஜை நடந்து வருகிறது. நேற்று காலை கலச பூஜையுடன் விழா துவங்கியது. ஆசிரம நிர்வாகிகள் என்.பாண்டுரங்கன், எம்.வெங்கடேசன், பி.சாந்தி, கே.பி.முரளி, சி.நாராயணமூர்த்தி, கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கலச பூஜையும், பிரதிஷ்டாபன பூஜையும், கேசவானந்த சுவாமியின் சிலைக்கு அபிஷேகமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மனத் துாய்மையே மகானின் அறநெறி. வம்பை ஒழித்து, அன்பை வளர்ப்பதே ஆத்மானந்த சுகம் என்பதை உணர்த்தி துஷ்ட செயலால் எந்த பயனும் இல்லை என்று வாழ வழி வகுத்தவர். அவரின் மனநிறைவான போதனைகளை போற்றி மகா குரு பூஜையை நடத்துவதாக பாண்டுரங்கன் தெரிவித்தார்.
மஹா குரு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.