தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் இன்று முதல் மீண்டும் சபாரி துவக்கம் 

 பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் இன்று முதல் மீண்டும் சபாரி துவக்கம் 

 பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் இன்று முதல் மீண்டும் சபாரி துவக்கம் 


ADDED : பிப் 19, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் இன்று முதல் மீண்டும் சபாரி துவக்கப்பட உள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் தாலுகா பண்டிப்பூர், மைசூரு எச்.டி.கோட் தாலுகா நாகரஹொளே வனப்பகுதிகளில், சுற்றுலா பயணியர் சபாரி செல்ல ஏற்ற இடமாக உள்ளது. கடந்த ஆண்டு சுற்றுலா பயணியர் சபாரி சென்ற சில வாகனங்கள் மீது, சிறுத்தை பாய்ந்தது. ஒருவர் காயம் அடைந்தார்.

இதையடுத்து பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் சபாரிக்கு அரசு தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணியர் வருகை குறைந்ததால், ரிசார்ட்டிற்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது. மீண்டும் சபாரி துவங்க அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நேற்று அளித்த பேட்டி:

பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் நாளை (இன்று) முதல் மீண்டும் சபாரி துவங்கப்பட உள்ளது. பண்டிப்பூரில் முன்பு தினமும் 8 மணி நேரம் சபாரி இருந்தது. தற்போது 5 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. நாகரஹொளேயில் நான்கு மணி நேரம் மட்டுமே, சபாரிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோதமாக இரவில் சபாரி வாகனங்கள் இயங்குவதை தடுக்க, ஜி.பி.எஸ்., கருவி பொருத்த உத்தரவிட்டு உள்ளேன். பண்டிப்பூர், நாகரஹொளே, மலை மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை பற்றி விவாதித்து உள்ளோம். ஒவ்வொரு முறையும் புலிகளை பிடிக்கும் போது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us