/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சம்பளம் வழங்க முடியாது: பொம்மை எச்சரிக்கை
/
சம்பளம் வழங்க முடியாது: பொம்மை எச்சரிக்கை
ADDED : ஏப் 11, 2025 06:55 AM

ஹாவேரி: முன்னாள் முதல்வரும், லோக்சபா பா.ஜ., - எம்.பி.,யுமான பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு பால், மின்சாரம் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் உயர்த்தி உள்ளது. காங்கிரஸ் அரசு திவாலாகி விட்டது.
விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.மக்கள் விரோத காங்கிரஸ் அரசுக்கு எதிராக, மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை பா.ஜ., மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகிறது. ஹாவேரியில் இரவு, பகல் போராட்டங்களும் நடக்கின்றன.
ஊழல் பரவலாக உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே ஊழல் உள்ளதாக ஒப்புக்கொள்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் பலரும் கமிஷன் முறைகேடுகள் நடப்பதாக புகார் அளித்து உள்ளனர்.
ஆனால், முதல்வர் இது எதையும் பார்க்காதவாறு கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்து இருக்கிறார்.
மாநில அரசு உத்தரவாத திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக, மக்கள் மீது வரியை சுமத்தி வருகிறது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 700 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் மீட்டரை, 5,000 முதல் 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் மாபெரும் ஊழல் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

