/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலித்கள் வருவதால் சலுான்கள் மூடல்
/
தலித்கள் வருவதால் சலுான்கள் மூடல்
ADDED : மே 07, 2025 11:15 PM

கொப்பால்: தலித்துகள் வருகின்றனர் என்பதால், முடி திருத்தும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சவரம் மற்றும் முடி திருத்தம் செய்து கொள்ள, நகர்ப்பகுதிக்கு தலித்துகள் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கொப்பால் மாவட்டம், கர்நாடகாவின் பின்தங்கிய பகுதி. இந்த மாவட்டத்தில் ஜாதி பாகுபாடு இன்னும் உள்ளது. இங்குள்ள கிராமங்களின் ஹோட்டல்களில் தலித்துகள் நுழைய அனுமதி இல்லை.
முத்தாபள்ளி கிராமத்தில் ஹோட்டல்களில், தாழ்த்தப்பட்டோர் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த அதிகாரிகள், சமீபத்தில் கிராமத்துக்கு சென்று, இருதரப்பினருடன் சேர்ந்து சிற்றுண்டி அருந்தினர். அமைதி பேச்சு நடத்தினர்.
அப்போது, இனி ஜாதி, மதம் பார்ப்பது இல்லை என, கிராமத்தினர் உறுதி அளித்தனர்.
ஆனால் அதே கிராமத்தில், தற்போது முடி திருத்தும் கடைகளில் தலித்துகளுக்கு முக சவரம் செய்ய, முடி திருத்த மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலித்துகள் வருகின்றனர் என்பதால், முடி திருத்தும் கடைகள் மூடப்பட்டுள்ளன. கடை உரிமையாளர்கள், உயர் ஜாதியினர் வீடுகளுக்கே சென்று முடி திருத்தவோ, முக சவரமோ செய்கின்றனர்.
இரண்டு மாதங்களாக, தலித்துகள் சவரம் செய்து கொள்ள, கொப்பால் நகருக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மனம் வருந்திய தலித்துகள், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

