/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜூலை 6ல் சம்புகுல சத்திரிய திருமண மேடை நேர்காணல்
/
ஜூலை 6ல் சம்புகுல சத்திரிய திருமண மேடை நேர்காணல்
ADDED : ஜூன் 15, 2025 03:54 AM
பெங்களூரு: மைசூர் சம்புகுல சத்திரிய (வன்னியர்) சங்கம் சார்பில் ஜூலை 6ம் தேதி திருமண மேடை நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.
சங்க தலைவர் கிருஷ்ணன், செயலர் சம்பத் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மைசூர் சம்புகுல சத்திரிய (வன்னியர்) சங்கம் சார்பில் திருமண மேடை நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒரே குடையின் கீழ், வன்னியர், கவுண்டர், படையாட்சி பிரிவினர் பதிவு செய்து, பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை நுாற்றுக்கணக்கான மணமேடை உறுப்பினர்களுக்கு இத்திருமண மேடை மூலம் திருமணம் நடந்துள்ளது.
ஜூலை 6ம் தேதி காலை 10:30 மணிக்கு சங்க அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 080 - 2356 5561 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.