/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாம்ராஜ்நகர் தமிழ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
சாம்ராஜ்நகர் தமிழ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 23, 2025 08:47 AM

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்ட தமிழ் சங்கத்தின் பொறுப்புகள், புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாம்ராஜ்நகர் மாவட்ட தமிழ் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சங்க வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், மைசூரு தமிழ் சங்க தலைவர் பிரான்சிஸ், பொதுச் செயலர் ரகுபதி பங்கேற்றனர்.
புதிய நிர்வாக குழுவில், கவுரவ தலைவராக மாரப்பகவுண்டர், தலைவராக எஸ்.ஆர்.ராமசாமி, பொது செயலராக சி.சுப்பிரமணியம், பொருளாளராக ஸ்ரீதர், துணைத் தலைவர்களாக ஏ.எம்.மணி, எஸ்.பி.சேகர், வெங்கடாசலம், செயலர்களாக தங்கவேல், கதிர்வேல், சிவகுமார் மற்றும் 18 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தனர். இவர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள்.