/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சஞ்சாரி காவிரி' வினியோகம் ரூ.13.89 லட்சம் வருவாய்
/
'சஞ்சாரி காவிரி' வினியோகம் ரூ.13.89 லட்சம் வருவாய்
'சஞ்சாரி காவிரி' வினியோகம் ரூ.13.89 லட்சம் வருவாய்
'சஞ்சாரி காவிரி' வினியோகம் ரூ.13.89 லட்சம் வருவாய்
ADDED : ஜூன் 13, 2025 11:23 PM
பெங்களூரு: பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் துவக்கப்பட்ட 'சஞ்சாரி காவேரி' திட்டத்தின் மூலம், ஒரே மாதத்தில் 13.89 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பெங்களூரில் தனியார் குடிநீர் டேங்கர்கள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, வாரியம் சார்பில் மே 9ம் தேதி குடிநீர் விநியோகிக்கும் சேவை துவக்கப்பட்டது.
கடந்த மே 9ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்நாட்களில் மொத்தம், 1,532 குடிநீர் டேங்கர்கள் மூலம் 1.03 கோடி லிட்டர் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வாரியத்துக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 700 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
குடிநீர் டேங்கர்களுக்கு பெங்களூரு கிழக்கு, கே.ஆர்.,புரம், மஹாதேவபுரா மண்டலங்களில் அதிக டிமாண்ட் இருந்தது, என வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.