தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நாகமணி ஸ்ரீநாத்துக்கு சங்கீத வித்வான் விருது

நாகமணி ஸ்ரீநாத்துக்கு சங்கீத வித்வான் விருது

நாகமணி ஸ்ரீநாத்துக்கு சங்கீத வித்வான் விருது


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சங்கீத வித்வான் விருதுக்கு, கர்நாடக இசை பாடகி நாகமணி ஸ்ரீநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசரா பண்டிகையை முன்னிட்டு, கன்னட மற்றும் கலாசார துறை சார்பில், இசையில் சிறந்தவர்களுக்கு சங்கீத வித்வான் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான விருதுக்கு, கர்நாடக இசை பாடகி நாகமணி ஸ்ரீநாத், 76, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய, சர்வதேச அளவில் கர்நாடக இசை பாடலில் தனக்கென இடம் பிடித்தவர்.

மைசூரு பல்கலைக்கழகத்தின் இசை துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சுனதா கலாசார மையம் என்ற இசை பள்ளி மூலம், நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us