UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 11:22 PM
பெங்களூரு: ‘தசரா, தீபாவளி பண்டிகைகளை ஒட்டி, மைசூரு – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
* ரயில் எண் 06263: மைசூரு – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், வரும் 5ம் தேதி முதல், நவ., 11ம் தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மைசூரில் இருந்து மாலை 6:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் எண் 06264: ராமேஸ்வரம் – மைசூரு வாராந்திர சிறப்பு ரயில், வரும் 6ம் தேதி முதல் டிச., 1ம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரு வந்தடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
