/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குப்பை வீசியதை கண்டித்த துாய்மை பணியாளர் மீது தாக்கு
/
குப்பை வீசியதை கண்டித்த துாய்மை பணியாளர் மீது தாக்கு
குப்பை வீசியதை கண்டித்த துாய்மை பணியாளர் மீது தாக்கு
குப்பை வீசியதை கண்டித்த துாய்மை பணியாளர் மீது தாக்கு
ADDED : அக் 11, 2025 05:01 AM
கோவிந்த்ராஜ்நகர்: சாலையில் குப்பை வீசியதை கண்டித்த துாய்மை பணியாளர் தாக்கப்பட்டார். அவரை தாக்கிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
பெ ங்களூரு, கோவிந்த்ராஜ்நகர் சீனிவாசநகரில் நேற்று காலை துாய்மை பணியாளர் நாகேந்திரா, சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அங்கு ஸ்கூட்டரில் வந்த தம்பதி, குப்பை இருந்த கவரை, சாலையோரம் வீசினர். இதை பார்த்து கோபம் அடைந்த நாகேந்திரா, ''சாலையில் எதற்காக குப்பை வீசுகிறீர்கள்? உங்கள் வீட்டிற்கு வரும் குப்பை வண்டியில் போடுங்கள்,'' என கூறினார்.
இதை கேட்டு கோபம் அடைந்த தம்பதி, 'எங்களுக்கு புத்திமதி கூற நீ யார்?' என கூறி தகராறு செய்தனர். ''எனக்கு விதான் சவுதாவில் நிறைய பேரை தெரியும்; உன்னை வேலையை விட்டுத் துாக்கி விடுவேன்,'' என, நாகேந்திராவை, ஸ்கூட்டரில் வந்த நபர் மிரட்டினார்.
''நீங்கள் யாரிடம் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை ,'' என, நாகேந்திரா கூறியதால், கோபம் அடைந்த தம்பதி, தாங்கள் அணிந்திருந்த ஹெல்மெட்டால், நாகேந்திராவை தாக்கி, தப்பினர்.
நாகேந்தி ரா புகார் அளித்ததை அடுத்து, தம்பதி மீது கோவிந்த்ராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தம்பதி யார் என்று தேடிவருகின்றனர். நாகேந்திரா மீது தாக்குதல் நடத்தப்படும், வீடியோவும் வெளியாகி உள்ளது.