தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/துப்புரவு தொழிலாளர்கள் அவமதிப்பு: ஓய்வுபெற்ற அதிகாரிக்கு கண்டனம்

துப்புரவு தொழிலாளர்கள் அவமதிப்பு: ஓய்வுபெற்ற அதிகாரிக்கு கண்டனம்

துப்புரவு தொழிலாளர்கள் அவமதிப்பு: ஓய்வுபெற்ற அதிகாரிக்கு கண்டனம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடகு: பிளாஸ்டிக் கழிவுகளை, மற்ற கழிவுகளுடன் சேர்த்து போட வேண்டாம் என, கூறிய துப்புரவு தொழிலாளரை, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி அவமதித்தது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் பிராமணர் வீதியில் மடிகேரி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், நேற்று காலையில் குப்பை சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சீனிவாஸ், குப்பை போட வந்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து, குப்பை வாகனத்தில் போட்டார். இதை பார்த்த ஓட்டுநர் ரவி, ‘பிளாஸ்டிக் கழிவை சேர்த்து வாகனத்தில் போட வேண்டாம். தனித்தனியாக போடுங்கள்’ என கூறினார்.

இதனால் கோபமடைந்த சீனிவாஸ், குப்பை வாகன ஓட்டுநருடன் தகராறு செய்தார். ‘ஈர கழிவுகள், உலர்ந்த கழிவுகளை தரம் பிரிப்பது, எங்கள் வேலை அல்ல. உங்கள் வேலை. துப்புரவு தொழிலாளர்களாக பிறந்தது, உங்கள் கர்ம வினை. நாங்கள் படித்தவர்கள். குப்பையில் கை வைக்க மாட்டோம்’ என, பேசியுள்ளார்.

சீனிவாஸ் பேசியதை அங்கிருந்த சிலர், மொபைல் போனில் பதிவு செய்து, சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். பலரும் ஓய்வுபெற்ற அதிகாரி சீனிவாசை கண்டித்தனர். துப்புரவு தொழிலாளர்களை அவமதித்த, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us