தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு மேலிடத்திற்கு சதீஷ் ஜார்கிஹோளி அழுத்தம்

 கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு மேலிடத்திற்கு சதீஷ் ஜார்கிஹோளி அழுத்தம்

 கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு மேலிடத்திற்கு சதீஷ் ஜார்கிஹோளி அழுத்தம்


ADDED : பிப் 25, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு, கட்சி மேலிடத்திற்கு, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து உள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவராக, துணை முதல்வர் சிவகுமார் பதவி வகிக்கிறார். அடுத்த மாதம், 10ம் தேதியுடன், அவர் தலைவராக பதவியேற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது. தன் தலைமையில், 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், 135 இடங்களில் வெற்றி பெற்றதால், முதல்வர் பதவி வேண்டும் என்று, கட்சி மேலிடத்திடம் சிவகுமார் கேட்டு வருகிறார்.

அதேநேரத்தில், சிவகுமாரை கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து இறக்கி விட, முதல்வர் சித்தராமையா தரப்பு முயற்சித்து வருகிறது. தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா பகிரங்கமாகவே கூறி விட்டார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் டில்லி சென்ற, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து பேசினார். முதல்வர் பதவி விஷயத்தில் நிலவும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசியதாக இருவரும் கூறினர். ஆனால், மல்லிகார்ஜுன கார்கேயிடம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு, சதீஷ் ஜார்கிஹோளி அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த முதல்வர் யார் என்று, கட்சி மேலிடம் முடிவு செய்து கொள்ளட்டும். சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்ட சிலர் முதற்கட்ட தலைவர்களாக உள்ளனர்.

கட்சியில் உள்ள இரண்டு கட்ட தலைவர்களை, அரசியல் ரீதியாக வளர்த்து விடுவது அவசியம். 2024ல் நடந்த ஷிகாவி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், காங்., வெற்றி பெற்றதற்கு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஓட்டுகளே காரணம். அச்சமூகத்தினரின் ஓட்டுகளை கவரும் வகையில், தனக்கு தலைவர் பதவி தர வேண்டும் என, சதீஷ் ஜார்கிஹோளி கேட்டு உள்ளார். கட்சி மேலிடத்திடம் ஆலோசிப்பதாக கூறி, கார்கேயும் அனுப்பி வைத்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us