/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சவதத்தி கோவிலில் ரூ.3.39 கோடி வசூல்
/
சவதத்தி கோவிலில் ரூ.3.39 கோடி வசூல்
ADDED : ஜூலை 11, 2025 04:42 AM
பெலகாவி: பிரசித்தி பெற்ற சவதத்தி எல்லம்மா கோவிலில், மூன்று மாதங்களில் 3.39 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
பெலகாவி மாவட்டம், சவதத்தி தாலுகாவில், எல்லம்மனகுட்டாவில் எல்லம்மா கோவில் உள்ளது. இது பிரசித்தி பெற்றது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கர்நாடகாவின் அதிக வருவாய் கொண்ட கோவில்களில், இதுவும் ஒன்று.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் நடந்த பணி, நள்ளிரவு வரை தொடர்ந்தது.
உண்டியலில் 3.39 கோடி ரொக்கம் வசூலாகியிருந்தது. 32.94 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 340 கிராம் தங்க நகைகள், 9.79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டு கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைத்தது.