/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., கணக்கெடுப்பு 22ம் தேதி வரை நீட்டிப்பு
/
எஸ்.சி., கணக்கெடுப்பு 22ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : ஜூன் 10, 2025 02:34 AM
பெங்களூரு: எஸ்.சி., கணக்கெடுப்பு இம்மாதம் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் எஸ்.சி., கணக்கெடுக்கும் பணிகள், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் தலைமையில் கடந்த மாதம் 5ம் தேதி துவங்கின. இந்த பணிகளின்போது, மாநிலத்தில் உள்ள எஸ்.சி., பிரிவினர் எண்ணிக்கை குறித்த விபரம் கிடைக்கும். இதன் அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்தது.
'கர்நாடகா ஒன்', 'பெங்களூரு ஒன்', 'கிராமம் ஒன்' என மொத்தம் 9,400 அரசு உதவி மையங்கள் உள்ளன. எஸ்.சி., பிரிவினர் இங்கு சென்றோ அல்லது இணையம் வழியாகவும் பதிவு செய்யலாம்.
ஜூன் 6ம் தேதி வரை எடுத்த கணக்கெடுப்பு படி, மாநிலத்தில் 1.05 கோடி பேர் உள்ளனர். அரசு கணக்கெடுக்கும் பணி, இம்மாதம் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.