சித்தராமையா வீடியோ வழக்கு முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
சித்தராமையா வீடியோ வழக்கு முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 08:54 PM

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையா தொடர்பான வீடியோ வழக்கில், முன்னாள் காங்., பெண் பிரமுகர் கிருபா ஆல்வா உள்ளிட்ட ஏழு பேரின் முன்ஜாமின் மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பற்றி பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியான வழக்கை சி.சி.பி., போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெண் பிரமுகர் கிருபா ஆல்வா உள்ளிட்ட ஏழு பேர், நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை, கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சங்கரப்பா நேற்று முன்தினம் விசாரித்தார். முதல் தகவல் அறிக்கையில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என்றும், விசாரணையின் போது தங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக மனு தாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், முன்ஜாமின் மனுக்களை நீதிபதி சங்கரப்பா தள்ளுபடி செய்தார்.
