தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெற்றோரால் கடத்தப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு

பெற்றோரால் கடத்தப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு

பெற்றோரால் கடத்தப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் கனச்சூரில் உள்ள மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை இரண்டு நாட்களுக்கு முன் அவரது குடும்பத்தினரே கல்லுாரி வளாகத்தில் இருந்து பலவந்தமாக ஜீப்பில் ஏற்றி சென்றனர். இந்த வீடியோ வெளியானதும், மங்களூரு போலீசார், மாணவியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

மாணவியை கடத்திய ஜீப்பின் பதிவு எண்ணை வைத்து, தேடிய போது கேரளாவில் இருந்தது தெரிந்தது. உறவினர் வீட்டில் இருந்த மாணவியை நேற்று முன் தினம் இரவு, மங்களூரு போலீசார் மீட்டனர்.

அவரிடம் விசாரித்த போது, தனக்கு குடும்பத்தினருடன் இருக்க விருப்பம் இல்லை என்றார். எனவே, அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிந்த பின், மாணவியை அவர் விரும்பும் இடத்துக்கோ அல்லது காப்பகத்துக்கோ அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மாணவி பி.யு.சி., படிக்கும் போதே, ஹிந்து இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இது, மாணவியின் குடும்பத்தினருக்கு தெரிந்ததும், அவரை கண்டித்தனர்.

இளைஞரிடம் இருந்து பிரிக்கும் நோக்கில், பி.யு.சி., முடித்தவுடன், கனச்சூரின் மருத்துவ கல்லுாரியில் மகளை சேர்த்தனர். ஆனால் அப்போதும் அந்த இளைஞருடனான தொடர்பை அந்த பெண் துண்டிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த பெற்றோர், மகளை வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். கல்லுாரிக்கு வந்து மகளை பலவந்தமாக இழுத்து சென்று, உறவினர் வீட்டில் விட்டனர் என கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us