/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை: பரமேஸ்வர்
/
எஸ்.சி., உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை: பரமேஸ்வர்
எஸ்.சி., உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை: பரமேஸ்வர்
எஸ்.சி., உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை: பரமேஸ்வர்
ADDED : ஆக 11, 2025 04:44 AM

பெங்களூரு: ''எஸ்.சி., சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை நான் எதிர்க்கவில்லை,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் எஸ்.சி., சமூகத்தின் உட்பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான குழு, முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே, என் வீட்டில் எஸ்.சி., சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் விவாதம் நடத்தினேன். அறிக்கையில் என்ன உள்ளதோ அதை ஏற்று கொள்ள வேண்டும் என்று, ஒரு மனதாக முடிவு எடுத்தோம்.
ஆனால் அறிக்கை தாக்கல் ஆன பின், உள் இடஒதுக்கீட்டை, நான் எதிர்ப்பதாக சிலர் பொய்யான தகவல் பரப்புகின்றனர். அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையை வைத்து விவாதித்த போது, நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டசபை தேர்தலின் போது தேர்தல் அறிக்கையை, என் தலைமையிலான குழு தயாரித்தது. அந்த அறிக்கையில் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை சேர்த்ததே நான் தான். வரும் 16 ம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.