/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவி பலாத்காரம்; பள்ளி ஆசிரியர் கைது
/
மாணவி பலாத்காரம்; பள்ளி ஆசிரியர் கைது
ADDED : ஏப் 07, 2025 10:18 PM

கலபுரகி; வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த, ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கலபுரகி ஆலந்த் மதனஹிப்பரகாவில் உள்ள அரசு பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக வேலை செய்பவர் சிவராஜ் ஹனுமந்தா, 32. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்.
இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் மாலை பக்கத்து ஊரில் நடந்த திருவிழாவுக்கு சென்றனர். மாணவி செல்லவில்லை.
தன் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அங்கு வந்த சிவராஜ், மாணவியிடம் பேச்சு கொடுத்தார்.
மாணவி வீட்டில் பெற்றோர் இல்லை என்று அவருக்கு தெரிந்தது.
மாணவியுடன் பேசிக் கொண்டே அவரது வீட்டிற்குள் சென்றுவிட்டார். பின், மாணவியிடம், அவரை காதலிப்பதாக கூறி உள்ளார்.
ஆனால், மாணவி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
கோபம் அடைந்த சிவராஜ், மாணவியிடம், 'நீ எனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கொன்று விடுவேன்' என்று மிரட்டி பலாத்காரம் செய்து விட்டு தப்பினார்.
திருவிழா முடிந்து இரவில் வீடு திரும்பிய பெற்றோரிடம், மாணவி நடந்த சம்பவத்தை கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிவராஜ் மீது மதனஹிப்பரகா போலீசில் புகார் செய்தனர்.
நேற்று காலை சிவராஜ் ஹனுமந்தா கைது செய்யப்பட்டார்.

