தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாயமான கேரள பெண் 3வது நாளாக தேடும் பணி

 மாயமான கேரள பெண் 3வது நாளாக தேடும் பணி

 மாயமான கேரள பெண் 3வது நாளாக தேடும் பணி


ADDED : ஏப் 06, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடகு: தடியண்டமோல் மலையில் டிரெக்கிங் சென்று மாயமான கேரள பெண்ணை தேடும் பணி நேற்று மூன்றாவது நாளாக நடந்தது. அவரை பற்றி எந்த தடயமும் கிடைக்காததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சரண்யா, 36. குடகு மாவட்டம், மடிகேரிக்கு கடந்த 1ம் தேதி சுற்றுலா வந்தார். ஹோம் ஸ்டேயில் தங்கியிருந்த அவர், கடந்த 2ம் தேதி காலை சுற்றுலா பயணியர் சிலருடன், தடியண்டமோல் மலைக்கு டிரெக்கிங் சென்றார்.

மற்றவர்கள் திரும்பி வந்த நிலையில், சரண்யா மட்டும் மாயமானார்.

கடந்த 3ம் தேதியில் இருந்து அவரை வனப்பகுதிக்குள் தேடும் பணி நடக்கிறது. நேற்று 3வது நாளாக மோப்ப நாய்கள், ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் தேடியும், சரண்யாவை பற்றி எந்த தடயமும் கிடைக்காததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தடியண்டமோல் வனப்பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் அதிகம். வழி தவறி சென்ற சரண்யா, யானை கூட்டத்தில் சிக்கி அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்கலாமோ என்ற அச்சம் நிலவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us