தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'டிரெக்கிங்' சென்ற கேரள இளம்பெண் மாயம் தேடுதல் பணி தீவிரம்

 'டிரெக்கிங்' சென்ற கேரள இளம்பெண் மாயம் தேடுதல் பணி தீவிரம்

 'டிரெக்கிங்' சென்ற கேரள இளம்பெண் மாயம் தேடுதல் பணி தீவிரம்


ADDED : ஏப் 04, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடகு: 'டிரெக்கிங்' சென்ற கேரள இளம்பெண் மாயமானார். அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

குடகு மாவட்டம் மடிகேரியில், தடியண்டமோல் வியூ பாயின்ட் உள்ளது. கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான இங்கு, ஏராளமான சுற்றுலா பயணியர் டிரெக்கிங் செல்கின்றனர். வனத்துறை சார்பிலும், தனியார் ஆட்களும் டிரெக்கிங் அழைத்துச் செல்கின்றனர்.

கேரளாவை சேர்ந்த சரண்யா, 36 என்பவர், தடியண்டமோலில் டிரெக்கிங் செல்ல, கடந்த, 28ம் தேதி மடிகேரி வந்தார். தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் காலை, சுற்றுலா பயணியர் குழுவுடன் இணைந்து டிரெக்கிங் சென்றார்.

மாலையில் சுற்றுலா குழுவினர் திரும்பிய நிலையில், அந்தக் குழுவுடன் சென்ற சரண்யா மட்டும் திரும்பி வரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. டிரெக்கிங் சென்ற போது, வனப்பகுதிக்குள் வழி மாறி சென்று மாயமானது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்த வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன், இரவு முழுதும் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாக சரண்யாவை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. அவரது நிலை என்ன என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து அவரது பெற்றோரும் வந்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us