கழற்றி விடப்பட்ட 'யோகம்!'
பொம்மைக்கு பெயர் பெற்ற தொகுதியில போன வருஷம் இடைத்தேர்தல் நடந்துச்சு. கை கட்சி வேட்பாளரா போட்டியிட்ட யோகேஸ்வரு ஜெயிச்சாரு. அவர தாமரை கட்சியில இருந்து அழைச்சிட்டு வந்த அப்போ, இவரு தான் பெரிய தலைவருன்னு கை கட்சிகாரங்க 'பில்டப்' பண்ணாங்க.
துணை முதல்வர் சிவாவும், அவரது தம்பி சுரேஷும் தலையில துாக்கி வெச்சாங்க. எங்க போனாலும் கூப்பிட்டு போனாங்க. ஆனால் இப்போ தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க. சமீபத்துல பாமுல் இயக்குனரு பதவிக்கு, சுரேஷ் வேட்புமனு தாக்கல் பண்ண அப்போ யோகமானவரு இல்ல. வேலை முடிஞ்சதும் கழட்டி விட்டுடுவாங்கன்னு நாங்க தான் முன்னாடியே சொன்னோமேன்னு யோகமானவர, தாமரை கட்சிகாரங்க கிண்டல் பண்றாங்க.
அரசியல் குரு அறிவுரை!
சிக்கபல்லாபூர் மாவட்ட தாமரை கட்சியோட இளம் தலைவரு ஒருத்தருக்கு, மாவட்ட தலைவர் பதவி கிடைச்சுச்சு. ஆனா எம்.பி.,யோட எதிர்ப்பால பதவிய நிறுத்தி வைச்சுட்டாங்க. அந்த இளம் தலைவர் சுறுசுறுப்பாக வேலை செய்ய கூடியவரு. இதனால அவர தங்கள் பக்க இழுக்க, கை கட்சிக்காரங்க துாண்டில் போட்டு இருக்காங்க.
'எங்க கட்சிக்கு வந்துடுங்க. எதிர்காலத்துல உங்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்'னு ஆசைகாட்டிட்டு வர்றாங்களாம். இதனால அந்த இளம் தலைவரு, தன்னோட அரசியல் குருவான எலஹங்காகாரர் கிட்ட போய் ஆலோசனை கேட்டு இருக்காரு. 'அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்'னு எலஹங்காகாரர் புத்திமதி சொல்லி அனுப்பி வைச்சு இருக்காராம்.
கட்டமைக்க முடியுமா?
கர்நாடகாவுல புல்லுக்கட்டு கட்சி மாநில கட்சியா இருக்குறாங்க. ஆனா தனிச்சு அவங்களால வெற்றி பெற முடியல. ஒவ்வொரு தேர்தல்லயும் கை அல்லது தாமரை கூட கூட்டணி போடுறாங்க. கட்சியோட தேசிய தலைவர் தொட்டகவுடருக்கு வயசாகிடுச்சு. இளம் தலைவர்களான தன்னோட மூணு பேரன்களும் கட்சிய வளர்த்துருவாங்கன்னு நம்பிக்கையில இருந்தாரு.
ஆனா பேரன்கள்ல இரண்டு பேரு பாலியல் வழக்குல சிக்கி, பெயரை கெடுத்து வைச்சி இருக்காங்க. இன்னொரு பேரனான சினிமாகாரரு கட்சிய வளர்ப்பேன்னு தான் சொல்றாரு. இதுவரை செயல்ல எதையும் காட்டல. சமீபகாலமா அவரு தீவிர அரசியல் பண்ண மாதிரி தெரியல. இப்படியே இருந்தா கட்சிய கட்டமைக்க முடியுமான்னு தொண்டர்கள் மத்தியில கேள்வி எழுந்து இருக்கு.