/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த செக்யூரிட்டி கைது
/
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்த செக்யூரிட்டி கைது
ADDED : ஆக 05, 2025 07:03 AM
கெங்கேரி : வீட்டின் முன் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தனியார் கடை செக்யூரிட்டி, பேன்டை ஜிப்பை கழற்றி, அநாகரிகமாக நடந்து கொண்டதாக, போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு, கெங்கேரியின் துணை நகர வெளிவட்டசாலையில், 'மெகா மார்ட்' என்ற கடை உள்ளது. இதன் அருகில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி, மார்ட்டுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பெண்ணின் வீட்டின் முன் வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.
இதை பார்த்த அப்பெண், மெகா மார்ட் செக்யூரிட்டி சந்திரஹாசனிடம் முறையிட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மார்ட் மேலாளரிடம் புகார் செய்ய அப்பெண் சென்றார்.
இதனால் கோபமடைந்த செக்யூரிட்டி, அப்பெண்ணை நிறுத்தி, ஆபாசமாக பேசியது மட்டுமின்றி, தன் பேன்ட் ஜிப்பை கழற்றி, அநாகரிகமாக நடந்து கொண்டார். அத்துடன் பெண்ணையும் தாக்கினார். இதை பார்த்த அப்பகுதியினர், '112'க்கு போன் செய்தனர். அங்கு வந்த கெங்கேரி ரூரல் போலீசார், செக்யூரிட்டியை அழைத்துச் சென்றனர். பின், காயத்துக்கு சிகிச்சை பெற்ற அப்பெண், 3ம் தேதி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, செக்யூரிட்டியை போலீசார் கைது செய்தனர்.