/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஊழியர்களின் வருகை பதிவுக்கு வருகிறது 'செல்பி' தொழில்நுட்பம்
/
ஊழியர்களின் வருகை பதிவுக்கு வருகிறது 'செல்பி' தொழில்நுட்பம்
ஊழியர்களின் வருகை பதிவுக்கு வருகிறது 'செல்பி' தொழில்நுட்பம்
ஊழியர்களின் வருகை பதிவுக்கு வருகிறது 'செல்பி' தொழில்நுட்பம்
ADDED : மார் 29, 2025 04:51 AM
பெங்களூரு : அரசு அலுவலகங்களில், விரல் ரேகை மூலம் வருகை பதிவு செய்யும் நடைமுறை மாறவுள்ளது. இனி 'செல்பி' எடுத்து வருகையை பதிவு செய்யும், புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த, அரசு தயாராகிறது. இதன் மூலம் முறைகேடுகளுக்கு முடிவு கட்டப்படும்.
அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய, பயோமெட்ரிக் நடைமுறை உள்ளது. சில ஊழியர்கள் பயோமெட்ரிக்கில் வருகையை பதிவு செய்துவிட்டு, அலுவலகத்தில் இருந்து வெளியே சென்று விடுகின்றனர்.
முற்றுப்புள்ளி
பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள், வந்த வேலை முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அரசு தீவிரமாக கருதி, ஊழியர்களின் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் நாட்களில் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவது, பயோமெட்ரிக் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 'செல்பி' எடுத்து வருகையை பதிவு செய்யும் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும்.
ஏற்கனவே சுகாதாரத்துறையின், சில அலுவலகங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது; நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே மற்ற துறைகளுக்கும் விஸ்தரிக்க, அரசு தயாராகி வருகிறது. இந்த தொழில்நுட்பம், இந்தியாவிலேயே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
'லிங்க்'
இதுதொடர்பாக, ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடக ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறையின், இ - நிர்வாக பிரிவு, புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை, தங்கள் மொபைல் போனில் டவுண்லோட் செய்து, ஆதார் எண்ணுடன் ஊழியர்கள் 'லிங்க்' செய்து கொள்ள வேண்டும்.
இந்த தொழில்நுட்பத்தில் தங்களின் செல்பி போட்டோவை, அப்லோட் செய்ய வேண்டும். இந்த செல்பி, அரசின் மனித வளம் மேலாண்மை சேவை பிரிவில் உள்ள ஊழியர்களின் போட்டோவுடன் பொருந்தி இருக்கும். அந்த போட்டோவுடன், செல்பி போட்டோ, செயற்கை நுண்ணறிவு மூலம் சரி பார்க்கப்படும்.
ஊழியர்களின் பணியிடம் பற்றிய தகவல்கள், மனிதவளம் மேலாண்மை சேவை பிரிவில் இருக்கும். இவர்கள் பணியிடத்தில் இருந்து செல்பி எடுத்து, அப்லோட் செய்தால் மட்டுமே, அவர்களின் வருகை பதிவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.