sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிரி செயற்கைக்கோளை கண்காணிக்கும் தொழில்நுட்பம்: இந்திய நிறுவனம் சாதனை

/

எதிரி செயற்கைக்கோளை கண்காணிக்கும் தொழில்நுட்பம்: இந்திய நிறுவனம் சாதனை

எதிரி செயற்கைக்கோளை கண்காணிக்கும் தொழில்நுட்பம்: இந்திய நிறுவனம் சாதனை

எதிரி செயற்கைக்கோளை கண்காணிக்கும் தொழில்நுட்பம்: இந்திய நிறுவனம் சாதனை

6


ADDED : பிப் 09, 2026 01:24 AM

Google News

6

ADDED : பிப் 09, 2026 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்த, 'அஜிஸ்டா ஏரோஸ்பேஸ்' நிறுவனம், தங்களின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மூலம், விண்வெளியில் உள்ள பிற பொருட்களை துல்லியமாக படம் பிடிக்கும் திறனை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.

நம் நாட்டின் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை தயாரித்து இஸ்ரோ உதவியுடன் ஏவி வருகின்றன.

குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த, 'அஜிஸ்டா ஏரோஸ்பேஸ்' நிறுவனம், 80 கிலோ எடை கொண்ட, 'ஏ.எப்.ஆர்' என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோள், விண்வெளியில் சுற்றி வரும் ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தை சமீபத்தில் துல்லியமாக படம் பிடித்தது.

அதிவேகமாக நகரும் ஐ.எஸ்.எஸ்., துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, 15 தனித்தனி படங்களாக பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 300 கி.மீ., மற்றும் 245 கி.மீ., துாரங்களில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முயற்சி, 'நான்- எர்த் இமேஜிங்' எனப்படும் பூமியல்லாத பொருட்களை படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தில், இந்திய தனியார் துறையின் முதல் வெற்றிகரமான முயற்சி எனக் கருதப்படுகிறது. முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அஜிஸ்டா தெரிவித்துள்ளது.

தற்போது நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு போட்டியில், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களையும் கண்காணிக்க வேண்டியது முக்கியமாகிறது. ஏற்கனவே இஸ்ரோ இந்தத் துறையில் சில சோதனைகளை நடத்தியுள்ளது. முதன் முறையாக நம் நாட்டு தனியார் நிறுவனமும் இதில் சாதித்துள்ளது.






      Dinamalar
      Follow us