/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத்திய அரசு உரம் வழங்கவில்லை செலுவராயசாமி குற்றச்சாட்டு
/
மத்திய அரசு உரம் வழங்கவில்லை செலுவராயசாமி குற்றச்சாட்டு
மத்திய அரசு உரம் வழங்கவில்லை செலுவராயசாமி குற்றச்சாட்டு
மத்திய அரசு உரம் வழங்கவில்லை செலுவராயசாமி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 31, 2025 05:41 AM

பெங்களூரு : ''மத்திய அரசு, கர்நாடகாவுக்கு போதுமான உரம் வழங்கவில்லை,'' என்று, கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராயசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவர் அசோக், விஜயேந்திரா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மாநிலத்தில் உர பற்றாக்குறைக்கு, காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று சொல்கின்றனர்.
யதார்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முன்கூட்டியே பருவமழை துவங்கியதால், கூடுதலாக 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மக்கா சோளம் விதைக்கப்பட்டு உள்ளது.
இதனால் உரத்தின் தேவை அதிகரித்து உள்ளது. மத்திய அரசு கர்நாடகாவுக்கு போதுமான உரம் வழங்கவில்லை.
இலங்கை, வங்கதேசத்திற்கு உரம் கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது என்று, அறிவு இல்லாமல் குற்றச்சாட்டு சொல்வதற்கு பதி லாக உண்மையை புரிந்து கொண்டு, பா.ஜ., தலைவர்கள் பேச வேண்டும்.
வங்கதேசம், இலங்கை எல்லைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அப்படி என்றால் மத்திய உளவு துறை மீது பா.ஜ., தலைவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனரா.
தெலுங்கானா, கேரளா, தமிழகத்திற்கும், மத்திய அரசிடம் இருந்து போதுமான உரம் கிடைக்கவில்லை என்ற தகவல் என்னிடம் உள்ளது. மத்திய உர துறை அமைச்சர் நட்டா, விவசாய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானை சந்தித்து பேச உள்ளேன்.
நானோ உரம் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.