/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குமாரசாமி எதிரியாக பார்க்கிறார் செலுவராயசாமி வேதனை
/
குமாரசாமி எதிரியாக பார்க்கிறார் செலுவராயசாமி வேதனை
குமாரசாமி எதிரியாக பார்க்கிறார் செலுவராயசாமி வேதனை
குமாரசாமி எதிரியாக பார்க்கிறார் செலுவராயசாமி வேதனை
ADDED : மார் 24, 2025 05:08 AM

மாண்டியா: ''மத்திய அமைச்சர் குமாரசாமி என்னை எதிரியாக பார்ப்பது வேதனையாக உள்ளது,'' என்று, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கூறினார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் ராஜண்ணாவை ஹனிடிராப் செய்ய முயன்றது குறித்து, அடுத்த இரண்டு நாட்களில் விசாரணை துவங்கும்.
துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கூறுவதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். அரசை குறை கூறுவதற்கு பா.ஜ., தலைவர்களிடம் எந்த விஷயமும் இல்லை. இதனால் தினமும் சித்தராமையா, சிவகுமார் பற்றி பேசுகின்றனர். இல்லாத கட்டுக்கதையை உருவாக்கி விடுகின்றனர்.
மாண்டியா மாவட்ட மக்கள் குடைகளை போன்றவர்கள் என்று, சிவகுமார் கூறிய கருத்தை நான் ஆதரிக்க மாட்டேன். இதுபோன்ற கருத்துகளை மீண்டும் கூற வேண்டாம் என்று கேட்டு கொள்வேன். மாண்டியாவில் விவசாய பல்கலைக்கழகம் அமைக்க, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றனர்.
நான் முன்பு ம.ஜ.த.,வில் இருந்தவன். குமாரசாமியின் நண்பராக இருந்து உள்ளேன். இப்போதும் அவரை நான் நண்பராக பார்க்கிறேன். ஆனால் அவர் என்னை எதிரி போன்று பார்ப்பது வேதனையாக உள்ளது. குமாரசாமி முதல்வராக நானும் ஒரு காரணம். தேவகவுடா குடும்பத்தின் மீது எனக்கு மரியாதை உண்டு.
முடா வழக்கில் தவறு செய்யவில்லை என்றாலும், சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று குமாரசாமி கூறினார். தற்போது நில முறைகேடு வழக்கில் குமாரசாமியை நீதிமன்றம் கண்டித்து உள்ளது. ௸நாங்கள் அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. அவரது பண்ணை வீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் அளக்கப்படுகிறது. அதற்கும் அரசு மீது குறை சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.