ADDED : நவ 07, 2025 10:55 PM

பொதுவாக சேமியாவில் உப்புமா, பாயசம் உட்பட, பல விதமான சிற்றுண்டிகள், இனிப்புகள் செய்வது வழக்கம். சேமியாவில் சுவையான லட்டும் செய்யலாம். எப்படி செய்வது என, பார்க்கலாமா.
செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில் சேமியாவை போட்டு, கையால் பொடித்து கொள்ளவும். பாதாம், முந்திரிப்பருப்பை மிக்சியில் பொடித்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றவும். காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியாவை போட்டு வறுக்கவும். இதில் பாதாம், முந்திரிப்பருப்பை போடவும். இரண்டு நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும்.
அடுப்பில் வேறொரு வாணலி வைத்து, வெல்லத்தை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். வெல்லம் கரைந்து பேஸ்ட் போன்று ஆக வேண்டும்.
இதை தெரிந்து கொள்ள ஒரு தட்டில் தண்ணீரை எடுத்து கொண்டு, அதில் பாகை ஸ்பூனால் எடுத்து போடவும். பேஸ்ட் போன்று தென்பட்டால், பாகு சரியான அளவில் உள்ளது என, தெரிந்து கொள்ளலாம்.
வெல்ல பாகில் ஏலக்காய் துாள் சேர்க்கவும். சேமியா கலவையை போட்டு நன்றாக கிளறவும். அதன்பின் தேவையான அளவில் லட்டு பிடிக்கவும். இந்த லட்டுகளை காற்று புகாத டப்பாவில் வைத்தால், சில நாட்கள் வரை கெடாது.
அதிகமான லட்டுகள் தயாரிக்க விரும்பினால், அதற்கு தகுந்தார் போன்று, சேமியா மற்றும் மற்ற பொருட்களின் அளவை அதிகரித்து கொள்ளவும். வீட்டுக்கு திடீரென விருந்தாளிகள் வந்தால், செய்து கொடுக்கலாம். குழந்தைகள் உட்பட எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் -.

