தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரசின் கடனை அடைக்க ரூ.50,000 அனுப்பி தாராளம்

அரசின் கடனை அடைக்க ரூ.50,000 அனுப்பி தாராளம்

அரசின் கடனை அடைக்க ரூ.50,000 அனுப்பி தாராளம்


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பாகல்கோட் நகரில் வசிப்பவர் விஜயராவ் குல்கர்னி, 68. இவர் தார்வாட் மாவட்டம், கலகடகி தாலுகாவின் சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இதற்கு முன் முதல்வராக இருந்த சித்தராமையா, பாகல்கோட் இடைத்தேர்தல் பிரசாரத்தில், ‘கர்நாடக அரசின் கடன், 8.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தலை மீதும், 1.20 லட்சம் ரூபாய் கடன் சுமை உள்ளது’ என கூறியிருந்தார்.

இது, விஜயராவ் குல்கர்னியின் மனதில், தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதியன்று, 50,000 ரூபாய்க்கான காசோலையை அரசு தலைமை செயலருக்கு, ‘ஸ்பீடு போஸ்ட்’ வழியாக அனுப்பி உள்ளார். காசோலை விபரம் மற்றும் தன் நோக்கத்தையும், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us