/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ம.ஜ.த.,வை கூட்டணியில் சேர்த்ததால் பா.ஜ., மூத்த தலைவர் ராமசாமி விலகல்
/
ம.ஜ.த.,வை கூட்டணியில் சேர்த்ததால் பா.ஜ., மூத்த தலைவர் ராமசாமி விலகல்
ம.ஜ.த.,வை கூட்டணியில் சேர்த்ததால் பா.ஜ., மூத்த தலைவர் ராமசாமி விலகல்
ம.ஜ.த.,வை கூட்டணியில் சேர்த்ததால் பா.ஜ., மூத்த தலைவர் ராமசாமி விலகல்
ADDED : ஏப் 19, 2025 11:14 PM

ஹாசன்: கூட்டணியில் ம.ஜ.த.,வை சேர்த்ததால், கட்சியில் இருந்து விலகுவதாகக்கூறி மாநிலத் தலைவர் விஜயேந்திராவுக்கு தன் ராஜினாமா கடிதத்தை, மூத்த தலைவர் ராமசாமி அனுப்பி வைத்துள்ளார்.
ஹாசன் அரகலகூடு தொகுதியில் இருந்து, தலா இரண்டு முறை காங்கிரஸ் - ம.ஜ.த., சார்பில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராமசாமி, 73. கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பு, ம.ஜ.த.,வில் இருந்து விலகினார்.
காங்கிரசில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்குர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
சட்டசபை தேர்தலில் அவருக்கு பதிலாக, யோக ரமேஷ் என்பவருக்கு பா.ஜ., சீட் வழங்கியது. இதனால் ராமசாமி அதிருப்தி அடைந்தார். ஆனால் வெளிக்காட்டவில்லை. லோக்சபா தேர்தலில் ம.ஜ.த.,வை, பா.ஜ., கூட்டணியில் சேர்த்தது அவருக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகினார்.
இந்நிலையில் பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, ராமசாமி நேற்று தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
கடிதத்தில், 'உலக வெப்பநிலையில் அதீத உயர்வு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். அரசியலை விட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம் என்று நினைக்கிறேன். மீதம் இருக்கும் என் வாழ்நாளை விவசாயம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிக்காக செலவிட முடிவு செய்துள்ளேன். இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன்' என்று கூறப்பட்டு உள்ளது.
இரு கட்சிகளுக்கு கூட்டணி ஏற்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதுவரை அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

