/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாகனங்கள் நிறுத்த தனி கட்டடங்கள்
/
வாகனங்கள் நிறுத்த தனி கட்டடங்கள்
ADDED : நவ 25, 2025 05:52 AM
பெங்களூரு: பெங்களூரில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
பெங்களூரில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. இதனால், தங்கள் வாகனங்களை சாலையோரத்தில், கடைகளின் முன் நிறுத்திவிட்டு வாகன ஓட்டிகள் செல்லும் அவல நிலை உள்ளது. சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இதை கருத்தில் கொண்ட ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், நகரின் சில பகுதிகளில் வாகனங்கள் நிறுத்து வதற்கான அடுக்குமாடி கட்டடங்களை கட்ட திட்டமிட்டு உள்ளது.
முதலில் மக்கள் புழக்கம் அதிகமாக இருக்கும் எம்.ஜி., ரோடு பகுதியில் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தியாக உள்ளது. இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற பகுதிகளிலும் வாகன நிறுத்துமிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

