/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொத்து ஆவணங்களை பாதுகாக்க மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு
/
சொத்து ஆவணங்களை பாதுகாக்க மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு
சொத்து ஆவணங்களை பாதுகாக்க மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு
சொத்து ஆவணங்களை பாதுகாக்க மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு
ADDED : மார் 30, 2025 03:57 AM
பெங்களூரு மாநகராட்சி எல்லையில் உள்ள 20 லட்சம் தனியார் சொத்துகள், 6,819 மாநகராட்சி சொத்துகளின் ஆவணங்களை பாதுகாக்க, மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்துகளை நல்ல முறையில் நிர்வகிக்கவும், ஆக்கிரமிப்பை தடுக்கவும் உதவியாக இருக்கும்.
மாநகராட்சி சொத்துகளில், 6,819 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 5,851 சொத்துகளுக்கு அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சொத்துகளுக்கும் அடையாள எண் வழங்கும் பணிகள் நடக்கின்றன. அடையாள எண் அளிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள், மாநகராட்சி இணைய தளத்தில் 'அப்லோட்' செய்யப்பட்டுள்ளன.
மண்டல அளவில், மாநகராட்சிக்கு உரிமையான சொத்துகள் அடையாளம் காணப்படுகின்றன. ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில் 60 சதவீத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2025 - 26ம் ஆண்டில், அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி சொத்துகள் அடையாளம் காண திட்டம்.
மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி சொத்துகள் நிர்வகிப்பு விதிகள் - 2024க்கு, அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த விதிமுறை நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வந்தது.
மாநகராட்சியில் ஒப்பந்தந்துக்கு அளிக்கப்பட்ட சொத்துகளின் ஒப்பந்த காலம் முடிந்துள்ளதால், புதிதாக ஏலம் விடவோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளின்படி ஒப்பந்தம் அல்லது வாடகை தொகை நிர்ணயிக்கப்படும்.