தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை வேலைக்காரரும் துாக்கிட்டு தற்கொலை

 பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை வேலைக்காரரும் துாக்கிட்டு தற்கொலை

 பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை வேலைக்காரரும் துாக்கிட்டு தற்கொலை


ADDED : பிப் 02, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைகோ லே - அவுட்: பெங்களூரில் 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்ற, வீட்டு வேலைக்காரரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு மைகோ லே - அவுட் கே.ஏ.எஸ்., காலனியில் வசிப்பவர், 67 வயது தொழில் அதிபர். இவரது தனது 65 வயது மனைவி, 27 வயது மகளுடன் இரண்டு மாடி வீட்டில் வசிக்கிறார். இந்த வீட்டில் தேவராஜ், 50 என்பவர் வேலைக்காரராக பணியாற்றினார்.

தொழில் அதிபர் சொந்த வேலையாக, சில தினங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்தார். வீட்டில் மனைவி, மகள், வேலைக்காரர் மட்டும் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு தொழில் அதிபரின் மனைவி, வீட்டின் முதல் தளத்தில் உள்ள தனது அறையிலும், மகள் இரண்டாவது தளத்தில் உள்ள அறையிலும் துாங்கி கொண்டு இருந்தனர்.

நள்ளிரவில் தொழில் அதிபர் மனைவி துாங்கிய அறைக்கு, வேலைக்காரர் தேவராஜ் சென்றார். வேலை கொடுத்து சம்பளம் கொடுக்கும் முதலாளி என்று கூட பாராமல், மூதாட்டியை பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து வெளியே கூறி விடுவார் என்ற பயத்தில், அவரது கழுத்தை நெரித்து கொன்றார்.

பின், அதே வீட்டில் தான் தங்கியிருந்த அறைக்கு சென்று, தேவராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துபாய் சென்றிருந்த தொழில் அதிபர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீடு திரும்பினார். 'காலிங் பெல்லை' அழுத்திய போது, மகள் வந்து கதவை திறந்தார். தனது அறைக்கு தொழில் அதிபர் சென்று பார்த்த போது, மனைவி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இன்னொரு அறைக்கு சென்று பார்த்த போது தேவராஜ் தற்கொலை செய்தது தெரிந்தது. கொலை, தற்கொலை சம்பவம் நடந்த போது, தொழில் அதிபர் மகள் வீட்டில் இருந்தும் அவருக்கு எதுவும் தெரியவில்லை.

மைகோ லே - அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us