/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதலாளி வீட்டில் கொள்ளையடித்த வேலைக்கார பெண், கணவர் கைது
/
முதலாளி வீட்டில் கொள்ளையடித்த வேலைக்கார பெண், கணவர் கைது
முதலாளி வீட்டில் கொள்ளையடித்த வேலைக்கார பெண், கணவர் கைது
முதலாளி வீட்டில் கொள்ளையடித்த வேலைக்கார பெண், கணவர் கைது
ADDED : ஜன 07, 2026 05:17 AM

சதாசிவநகர்: முதலாளி வீட்டில் கொள்ளையடித்த வேலைக்கார பெண், கணவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1.37 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு சதாசிவநகரில் வசிப்பவர் அபிஷேக்; தொழிலதிபர். இவரது வீட்டில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஹஷிரா பேகம், 28, என்பவர், 2020 முதல் 2024ம் ஆண்டு வரை வேலை செய்தார். பின், தனக்கு திருமணம் நடக்க உள்ளதாக கூறி, சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி அபிஷேக் வீட்டிற்கு சென்ற ஹஷிரா பேகம், மீண்டும் தன்னை வேலைக்கு சேர்த்து கொள்ளும்படி கேட்டார்.
ஏற்கனவே நான்கு ஆண்டுகள் பணியாற்றிய போது, நேர்மையாக வேலை செய்த காரணத்தால், ஹஷிரா பேகத்தை, அபிஷேக் மீண்டும் பணியில் சேர்த்தார்.
கடந்த மாதம் 30ம் தேதி இரவு அபிஷேக்கும், அவரது குடும்பத்தினரும் புத்தாண்டை கொண்டாட, தமிழகத்திற்கு சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ஹஷிரா பேகம், தனது கணவர் ஷாஹிர், 30, என்பவரை, முதலாளி வீட்டிற்கு வரவழைத்தார்.
சாவி மூலம் வீட்டில் இருந்த லாக்கரை திறந்து அதில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
அபிஷேக் திரும்பி வந்து பார்த்த போது, கொள்ளை நடந்தது தெரிந்தது. ஹஷிரா பேகம் மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவர் மீது சதாசிவநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மொபைல் போன் டவர் அடிப்படையில் ஹஷிரா பேகம், ஷாஹிர் கடந்த 3ம் தேதி மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 1.37 கோடி ரூபாய் மதிப்பிலான 787 கிராம் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்கள், ஏழு கைக்கடிகாரங் கள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

